Search This Blog

Wednesday, February 8, 2017

SA - 2 REVISION (2017)

அன்பு மாணவச் செல்வங்களுக்கு, இரண்டாம் தொகுநிலைத் தேர்விற்கான திருப்புதல் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. நகல் எடுத்து பயிற்சி செய்து கொள்ளவும்.
https://docs.google.com/document/d/1XGmha5xeDRVWQvQy6YxdhLwa_vOqQDquNaWsBk0Tps8/edit

Saturday, January 14, 2017

பொங்கல் மடல்-2017

பொங்கல் வாழ்த்து – 2017

திருநாளாம் திருநாளாம்

தைத்திங்கள் முதல் நாளாம்

தரணியெல்லாம் செழித்து வந்த

தங்க மகள் தளிர் நாளாம் (திருநாளாம்)

மார்கழியின் மகளானாய் – நீ

மங்கலத்தின் உறவானாய்

மும்மாரியில் வளர்ந்த நீ

மூவுலகின் வசமானாய் (திருநாளாம்)

தை தை ஓசையோடு

வைகறையில் பிறக்கக் கண்டு

மனதில் நின்ற மார்கழியும்

முடிவு எடுத்ததன்றோ (திருநாளாம்)

புத்தாக்கச் சிந்தனையை

மண்ணில் விதைத்ததன்றோ

பூப்போன்ற புன்னகையுடன்

புதுப்பாவை படைத்ததன்றோ

தையல் நாயகியாய்…

தைப்பாவை பிறந்ததன்றோ (திருநாளாம்)

புதுப்பானை கொண்டேத்தி

புத்தரிசி அதிலே இட்டு

மஞ்சளும் இஞ்சியும் அதன் கழுத்தை அலங்கரிக்க

மாங்கல்யம் பூண்டது போல் மங்கலமாய் மலந்து 

நின்றாள் (திருநாளாம்)

இயற்கையின்பால் வந்ததனை

இரைவிக்கே படைத்தருள்ந்து

இயற்கையைக் காப்போம் என்று

இரைவியை வணங்கினரே (திருநாளாம்)

திரு நாளாம் திருநாளாம்... பொங்கல் பாடல்


இப்பாடலின் கை வண்ணம் சித்ர கலா( நானே) இதற்கு அழகிய இசை அமைத்துக் கொடுத்தவர்.. பாட்டு ஆசிரியர் திருமதி,  லலிதா கண்ணன்.

Tuesday, October 25, 2016

பாதை ஷெல்டர்( ஒன்றாக)


                                     

பிறப்பால் அனைவரும் சமம்; பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை.

அனாதையாய்ப் பிறந்து பார் ! 

தாய் தந்தையர் அருமை புரியும் ! 
அடிமையாய் இருந்து பார் ! 
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் !
கடுமையாய் உழைத்துப் பார் ! 
வெற்றியின் மகிமை புரியும் ! 
அட மனிதனே ! 
இன்னுமா புரியவில்லை ? 
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் ! 
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் ! 
ஒரு முறையாவது மனித நேயத்துடன் 
வாழ்ந்து பார் ! ஆம்! இது ஒரு கவிஞனின் ஆதங்கக் குரல்... உலகில் பிறந்த எந்த ஒரு ஜீவராசிகளும் அனாதைகள் அல்ல, அனாதையாய் ஆக்கப்பட்டவர்கள்.இருப்பினும், மனிதர்களாய் மனித உள்ளத்தோடு மக்கள் நடமாடும் வரை எவரும் அனாதைகள் அல்ல..என்பதை  நிரூபிக்கும் பொருட்டு எமது சின்மயா பள்ளியின் சார்பாய் மாணவக் குழுக்கள், ஆசிரியப் பெருமக்கள் இணைய புதிய சக்தி எம்முள் புகுந்ததுபோல் சேவை செய்யப்புறப்பட்டோம்..அதற்கான அடிப்படைத் தேவைகளை ஆரய்ந்தோம்..அந்த ஆய்வின் பயன் எனது மாணவச் செல்வங்கள் அள்ளி இறைத்தார்கள் அவர்களால் முடிந்த உதவித்தொகை மற்றும் பொருள்களை...அள்ளி வாரினோம்..அழகாக வரிசையமைத்தோம்...முதன் முதலாக எனது கைகள் ஆசிரமத்தில் உள்ள மாணவச் செல்வங்களுக்காக கையேந்தியது.எனக்கு இது புது அனுபவமாக இருந்தாலும் புத்துணர்வை ஏற்படுத்தியது.இத்தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியவன் என் புதல்வனே...முயன்றோம், பொருள்கள் பல பெற்றோம்.நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசிரமத்திலுள்ள மாணவர்களைச் சந்தித்தோம்.மனம் கணத்தது அன்று...இன்று  இலகுவானதை உணர்ந்தேன்..ஏனென்றால் யார் யாருக்கோ வாரி இறைத்த இந்த கைகள் இன்று தகுதியறிந்து வந்து சேர்ந்ததை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு...மாணவர்களோடு அலாவளாவினோம்.பிரிய மனமின்றி பள்ளி திரும்பினோம்... நாள்: 23.10.2016... பாதை ஆசிரமம்.. வளசரவாக்கம்..சென்னை.

                                                                                                      
       
       
                                                  

Translate